/ மருத்துவம் / நலம் நம் கையில்! (பாகம் – 2)
நலம் நம் கையில்! (பாகம் – 2)
எளிமை தமிழில் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதிய 34 மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வில் சந்திக்கும் உடல் பிரச்னைகள், அதற்கான முன்னெச்சரிக்கை, தீர்வுகளை அழகாக விளக்கியுள்ளார்.துாக்கம் உடலுக்கு எவ்வளவு அவசியம், மனச்சோர்வு போக்க என்ன வழி போன்றவை வாழ்வியல் முறைக்கு அவசியமானவை. வெயில், பனிக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி போன்ற தகவல்கள் ஏராளம். முட்டை நல்லதா, காபி, தேநீர் குடிக்கலாமா போன்ற மருத்துவ அறிவும், ஆலோசனையும் தருகிறது. நவீன வாழ்க்கை முறையில் நோயற்று வாழ வழிகாட்டும் அற்புத மருத்துவ பெட்டகம். அனைவரும் படிக்க வேண்டிய நுால்.– -ஜி.வி.ஆர்.,