/ கட்டுரைகள் / நல்ல எண்ணம் நன்மையைத் தரும்

₹ 80

வாழ்க்கையை உருவாக்குவது எண்ணமே என உரைக்கும் நுால். எண்ணத்திற்கு நாமே பொறுப்பு என்கிறது. அடுக்கடுக்கான உதாரணங்களுடன் கருத்துகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போது புத்துணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படுகிறது. தீய எண்ணம் கொண்டவருக்கு, நல்ல சொற்கள் வாயில் வராது என அனுபவமாக எடுத்துரைக்கிறது. நல்ல சிந்தனை, நற்செயல்கள் உருவாக்குவதை அறிஞர்கள் வாழ்க்கையை முன்வைத்து காட்டுகிறது. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்களிப்பு, பொறுப்பின் முக்கியத்துவம் உரிய ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. நல்ல எண்ணத்தை மனதில் பதிய வைத்து, வாழ்வதில் வைராக்கியத்தோடு, தொடர் முயற்சியில் இருப்போரே சாதனையாளராவதாக உரைக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


சமீபத்திய செய்தி