/ தீபாவளி மலர் / நம் உரத்த சிந்தனை தீபாவளி சிறப்பிதழ் 2025

₹ 25

ஆன்மிக சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது உரத்த சிந்தனை தீபாவளி மலர். தெலுங்கானா மாநில பகுதியில் உள்ள ஆன்மிக தலங்கள் குறித்து அதிக விபரங்களை தந்து வியப்பில் ஆழ்த்துகிறது. தெலுங்கானா கோதாவரி நதிக்கரையில் பத்ராசலம் ராமர் கோவில் பற்றிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன. ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா செல்ல வழிகாட்டும் தகவல்கள் ஏராளம் உள்ளன. வாழ்வில் விரக்தி, சலிப்பு ஏற்படாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அருளுரை வழியாக எடுத்துரைக்கிறது. தெலுங்கானா கோவில்கள், ஆன்மிக முக்கியத்துவம் உள்ள இடங்கள் பற்றி எடுத்துரைக்கிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களை அறிமுகம் செய்து வழிகாட்டுகிறது. சலிப்பற்ற வாழ்வுக்கு பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது உரத்த சிந்தனை தீபாவளி சிறப்பிதழ். – ராம்


புதிய வீடியோ