/ தீபாவளி மலர் / நம் உரத்தசிந்தனை
நம் உரத்தசிந்தனை
எங்கும் இன்பம் பொங்கும் தீபாவளி என துவங்குகிறது நம் உரத்த சிந்தனை தீபாவளி சிறப்பிதழ். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை வரலாற்று பின்னணியடன் சொல்கிறது. வெளிநாடுகளில் தீபாவளி கொண்டாட்ட உற்சாகம் பற்றிய தகவலும் உள்ளது.தொடர்ந்து சரவெடியாக தமாசுகள் உள்ளன. அரசியல் தலைவர்களையும், மத்தாப்பு வகைகளையும் இணைத்து மிக எளிமையாக துணுக்குகள் எழுதப்பட்டுள்ளன. படித்து பாராட்டும் வண்ணம் உள்ளது. அடுத்து, திருப்புகலுார் அக்னீஸ்வரர் கோவில் பற்றிய விபரங்கள், படத்துடன் தரப்பட்டுள்ளன. மகான் விலஷணானந்த சுவாமிகள் பற்றிய கட்டுரை சுவை சேர்க்கிறது. நாட்டியம், பொது என அரிய செய்திகளுடன் மலர்ந்து ஜொலிக்கிறது உரத்த சிந்தனை தீபாவளி மலர்.– ராம்