/ ஆன்மிகம் / நான்...?

₹ 200

ஞானியர் காட்டும் தியானம், யோகம், பக்தி மார்க்கங்களை கூறும் நுால். மனிதன் யார், எங்கே போகிறான், ஒழுக்கம் எது, கடவுள் யார், அதன் வடிவமும் இருப்பிடமும் எவை, அவரை காண்பது எப்படி, ஆலயமும் வழிபாடும், சரியை, கிரியை, யோகா, தியானம் பற்றி விளக்குகிறது. சில பெண்களிடம் உள்ள வன்மம், வஞ்சகம், பழிவாங்கும் குணம் பற்றி அறியத்தருகிறது. ஒழுக்கம், வேதம், வேதாந்தம், யோகம் யாவற்றுக்கும் அடிப்படை என்கிறது. இயற்கை பேராற்றல் தான் கடவுள். அறிவியலும் பிரபஞ்சமும் இயற்கை சக்தியால் இயங்குவதை உரைக்கிறது. பேராசை, சுயநலம், அறியாமை, அமைதி இன்மை ஆகியவற்றை போக்க பக்தி மார்க்கங்களை கூறுகிறது. தியானம் மூலம் கடவுளை காணலாம் என்கிறது. நான் யார் என அறிவிக்கும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


புதிய வீடியோ