/ கதைகள் / நண்டு பொட்டலம்

₹ 250

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடலில் மீன் பிடிக்கச் சென்ற மகனுக்காக காத்திருக்கிறார் தாய். திடீரென புயல் மையம் கொண்டதாக அறிவிப்பு வர ஏற்படும் தவிப்பை, ‘கடலோடி’ கதை காட்டுகிறது. பேருந்து பயணத்தில் ஏழை பெண்ணிடம் அடாவடி நடத்துநர் செயலை, ‘முகம்’ கதை எடுத்துரைக்கிறது; உதவும் மனப்பாங்கை வலியுறுத்துகிறது. ஏழைகள் தன்னலமற்ற மனதை, ‘கைக்கடிகாரம்’ கதை படம் பிடிக்கிறது. நம்பிக்கையின்மையால் ஏற்படும் விளைவை, ‘தாயத்து’ கதை கருத்தில் கொள்ள வைக்கிறது. ஊர் அடங்கலால் தவிக்கும் குடும்பம் படும் சிரமம், வறுமையில் இருந்து மீண்டதா என்பதை, ‘ஊரடங்கு’ கதை மனித நேயத்துடன் போதிக்கிறது. பார்த்த, கேட்ட சம்பவங்களை மையப்படுத்தியுள்ள கதைகளின் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ