/ கதைகள் / நந்தவனம்
நந்தவனம்
பட்டாசு-நந்தனா, கதிர், ஜெனிபர், அர்ஜூன்-ஐயனார், யாழினி, சுவாதி , அரவிந்த், சாவித்ரி, விக்ரம்,ராக்கேஷ், துர்கா மற்றும் பல கதாபாத்திரங்களை கொண்டு அமைக்கப்பட்ட நந்தவனம் படித்தேன். இது ஆசிரியர் நறுமுகை ஈஸ்வரின் முதல் புத்தகம் ஆனால் அனைத்து பாத்திரங்களுக்கும் விரிவான உணவு கொடுத்து ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல் நந்தவனதின் செடிகளை வளரச் செய்துள்ளார். நட்பு, காதல், அண்ணன் தம்பி தங்கை குடும்பம் என நிறைய உணர்வுகளை நம்பகமான முறையில் எழுதி உள்ளார். ஆனால், சுவாதியின் குடும்பம் தன் இரண்டாவது பெண்ணிற்குகாக இவ்வளவு மோசமாக ஏன் நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இந்த நூலை படித்து முடித்தபின் என் மனதில் நின்றவன் கதிர்.நந்தவனம் பட்டாசு கொண்டு தயாரிக்கப்பட்ட சரவெடி... படித்து ரசிக்கலாம். வாழ்த்துகள்!– முருகவேலு வைத்தியநாதன்