/ ஆன்மிகம் / நவக்கிரக தலங்களும் வழிபாடும்
நவக்கிரக தலங்களும் வழிபாடும்
நவக்கிரகங்களை வழிபடுவது பற்றி வழிகாட்டும் நுால். கிரகங்கள் பூமியில் வாழ்க்கையை பாதிப்பதாக கருதப்படுகின்றன. சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளால் சமாதானப்படுத்தி, அதிர்ஷ்டத்தை மேம்படுத்தி தடைகளை கடக்க முடியும் என அறிவுரைக்கிறது.நவக்கிரக தலங்களின் முக்கியத்துவம், வழிபாட்டு முறை, ஒவ்வொரு கிரகத்தின் சிறப்பு பண்புகள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய 16 தலைப்புகளில் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கோவில் மற்றும் சடங்கு முறைகளுடன் தொடர்புடையதாக கூறுகிறது.சென்னை குன்றத்துார், சோமங்கலம் சோமநாதீஸ்வரர் கோவில் சந்திரனுக்குரிய பரிகாரத் தலம். கிரகங்களுக்கான பரிகாரத் தலங்களை தெளிவாக பட்டியலிடுகிறது. ஆன்மிக முக்கியத்துவமுள்ள நுால்.– வி.விஷ்வா