/ ஆன்மிகம் / நவீன நோக்கில் வள்ளலார்
நவீன நோக்கில் வள்ளலார்
வள்ளலாரின் தலையாய குறிக்கோள், "ஆன்ம நேய ஒருமைப்பாடு என்பது தான். ஆன்மா - உயிர், நேயம் - இரக்கம், ஒருமைப்பாடு - உயிர்களை சமமாக பாவிக்கும் இரக்க உணர்ச்சி. ஜீவகாருண்ய ஒழுக்கம் என வள்ளலார் குறிப்பிடுவது இந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டை தான்.இந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு தடையாக இருக்கக்கூடிய சாதி, சமய, சடங்காச்சாரங்கள், வேதாகம பவுராணங்கள், இன்ன பிற மூடநம்பிக்கைகள் எல்லாவற்றையும் துச்சமென தூக்கி எறிந்தவர்.அந்த வரிசையில், பெரும் சமூக சீர்திருத்தவாதியாய் விளங்கியவர் வள்ளலார். அதை புலப்படுத்துமாறு ஆசிரியர் எழுதிய, 17 பெரும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வள்ளலார் அன்பர்களுக்கு அரிய பொக்கிஷம் இந்த நூல்.