/ இசை, இயல், நாடகம் / நீதியே வெல்லும்!
நீதியே வெல்லும்!
உலக நடப்பை சொல்லும் நாடக நுால். காதலன் துாண்டுதலால் சொத்துக்காக மணந்தவனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று, மாரடைப்பு என நாடகமாடிய பெண் கடைசியில் என்ன ஆனாள் என்பதே கதையின் சாராம்சம். எவ்வளவு நேர்மையாக வாழ்ந்து, துன்பங்களை அனுபவித்தாலும் கடைசியில் சுகம் கிடைக்கும் என்ற நீதியை புகட்டுகிறது. தமிழ் வித்துவான் படித்த காலத்தில் பொன்னமராவதி, கொப்பனாபட்டி என்ற ஊர்களை மையமாக வைத்து கதை மாந்தர் வாழும் பகுதிகளாக காட்டி இருப்பது யதார்த்தமாக தெரிகிறது. ஒலிவாங்கி வழியாக உண்மையை கொலைக்காரர்களிடம் வாங்கிய விதம், அதை நீதிமன்றத்தில் சாட்சி ஆக்கியது எல்லாம் உத்தியுடன் எழுதப்பட்டுள்ளது. பாத்திரங்கள் குறைவாக உள்ளதால் படிக்க ஏற்ற நாடகம். – சீத்தலைச் சாத்தன்




