/ வாழ்க்கை வரலாறு / நேருவின் வாழ்க்கை
நேருவின் வாழ்க்கை
மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். பல்வேறு ஆங்கில புத்தகங்கள், நேரு எழுதிய புத்தகங்களின் துணை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நேருவின் வாழ்க்கை நிகழ்வுகளை, 43 இயல்களாக பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது. எளிய மொழி, தடங்கலற்ற வாசிப்பை தருகிறது. இறுதியாக நேரு எழுதிய உயில் வாசகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அது நெகிழ்ச்சியுடன் உள்ளது. இந்தியா மீது நேரு கொண்டிருந்த பற்றையும், வளர்ச்சியில் செலுத்திய உழைப்பையும், அவரது வாழ்க்கை மாண்பையும் தெரிவிக்கிறது. படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாற்று நுால்.




