/ கதைகள் / நெலத்து வாடை
நெலத்து வாடை
ஒரத்தநாடு பகுதி வாழ்க்கை முறையில் அமைந்த நாவல் நுால். எதையும் தீர்மானிக்க முடியாமல் வாழும் குட்டியப்பன்; நல்லது மட்டுமே எண்ணும் அவன் மனைவி பேச்சியம்மா. இந்த பின்னணியில் மூன்று தலைமுறை வாழ்வை கண்முன் நிறுத்துகிறது. குடி, தவறான பழக்கவழக்கம் இருந்தாலும், கணவர் திருந்தமாட்டாரா என்ற எதிர்பார்ப்புடன், மகன் படிக்கவில்லையே என்ற ஏக்கம், மகளை படிக்க வைக்கும் வைராக்கியத்துடன் பேச்சியம்மா கதாபாத்திரம் உள்ளது. குடும்பத்தில் இருந்து பிரிந்த கணவரை பார்க்க விரும்பிய பேச்சியம்மா ஆசை நிறைவேறியதா என விறுவிறுப்பாக உள்ளது. செய்யும் தொழில் தவறாக இருந்தாலும், தருமன் கதாபாத்திரம் நாவலை நகர்த்துகிறது. குடும்பத்தில் மனக்கசப்பு இருந்தாலும், அதை அன்புடன் எதிர்கொள்வதை மையப்படுத்தும் நாவல். – டி.எஸ்.ராயன்




