/ கட்டுரைகள் / பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி...!
பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி...!
பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் எழுத்துகளை அடியொற்றி அதே பாணியில் புதுச்சேரி எழுத்தாளரால் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ள எளிய நுால். பத்திரிகை அலுவலகத்தில் நடக்கும் சிறிய சம்பவங்களை முன்வைத்து சீதாப்பாட்டி, அப்புசாமி பாத்திரங்களுடன் நகைச்சுவை உணர்வுடன் அமைந்துள்ளது. இதற்காக 13 நிகழ்வுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஆங்கிலம் கலந்த வட்டார வழக்கில் விவரிக்கிறது. நகைச்சுவை புத்தகத்துக்கு அகாடமி பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. கார்ட்டூனிஸ்ட் மதன் நடத்திய விகடகவி மின் இதழில் வெளிவந்த கட்டுரை தற்போது நுால் வடிவம் பெற்றுள்ளது. பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவையை நினைவூட்டும் நுால். – வி.ராமலிங்கம்




