ஒல்லி பெல்லி
உடல் குண்டாக இருக்கிறதே என கவலைப்படுபவர்களுக்கும், உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் ஏற்ற நுால் இது. மருத்துவ வார்த்தைகளை முடிந்த அளவு குறைத்து, எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி எழுதுவதில் வல்லவர் டாக்டர் கு.கணேசன். இந்த புத்தகமும் அப்படியே அவரது எளிமையான எழுத்தில் வெளிவந்துள்ளது. உடல் பருமனுக்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள், உடல் பருமன் ஏற்படுத்தும் விளைவுகள் என பல விஷயங்களையும் ஆராய்ந்து, 23 தலைப்புகளில் தந்துள்ளார்.நுாலின் முன்னுரையில் டாக்டர் கு.கணேசன் இவ்வாறு எழுதியுள்ளார். என்னை பொறுத்தவரையில் அடுத்தவருக்கு ஆலோசனை சொல்வதற்கு முன் அதை நம்மால் பின்பற்ற முடியுமா? என்று யோசிப்பவன். இந்நுாலில் உங்களுக்கு என்ன ஆலோசனை சொல்லியிருக்கிறேனோ அவற்றை பின்பற்றி, ஆறு மாதங்களில் என் உடலில், 8 கிலோ எடையை குறைத்திருக்கிறேன்’ என்று எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை படித்து நாமும் முயற்சிக்கலாம்!– ஜி.வி.ஆர்.,