/ கதைகள் / ஊத்து
ஊத்து
தொல்குடி மக்களின் வாரிசுகளை முன்வைத்து புனையப்பட்டுள்ள நாவல் நுால். தலைமுறையாக வரும் வீரம் குறித்து விவரிக்கிறது. காதல் தோய்ந்த தம்பதியர் செயல்பாடே கதையின் மையமாக உள்ளது. எளிமையாக பயணம் செய்யும் தம்பதியர் பண மதிப்பிழப்பு காலத்தில் சந்திக்கும் தடுமாற்றத்தையும், எதிர்கொள்ளும் தன்மையையும் பேசுகிறது. அதே நேரம் சாமானிய மக்கள் வாழ்க்கை பாதாளத்தில் வீழ்வதையும் எடுத்து சொல்கிறது. பொருளியல் போர்க்களத்தில் இருந்து மீள நடக்கும் போராட்டத்தை பேசுகிறது. ஜீவித பயணத்தில் புதிய எல்லையை தொடுவதற்கான வழிகாட்டல் நெறியே மரணம் என்ற தத்துவ கருத்து மனதை கவர்கிறது. நாவலின் பகுதிகளுக்கு வெளிச்சத்தை கொண்டு தலைப்பாக சூட்டியிருப்பது பளிச்சென இருக்கிறது. வாசிப்பின் வழி இனிமை ஊட்டும் நுால். – ஊஞ்சல் பிரபு