வாசகர்கள் கருத்துகள் (1)
ElamparithiM
ஜூலை 11, 2026 08:25 AM
அருமை
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! Send Post
சுருக்கமான 100 கதைகளை உள்ளடக்கிய நுால். சமுதாய பொறுப்புள்ளோர், எந்த விதமாக கேள்வி எழுப்பினாலும், பணிவாக பதில் அளிக்க வேண்டும் என்பதை ஒரு கதை சுட்டிக்காட்டியுள்ளது. ஜாதகம் மற்றும் விதியைப் பற்றிய கதை நகைச்சுவையான கலவை. வேண்டியதை விட்டுவிட்டு, தேவையற்ற விஷயங்களை யோசித்துக் கொண்டிப்பதால் தான் பிரச்னை ஏற்படுகிறது என்ற கருத்தும் அருமை. பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்தால் தான் உலகம் போற்றும் என உணர்த்தப்பட்டுள்ளது. சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனார் கூறிய, ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்பதற்கான விளக்கத்தையும் ஒரு கதையில் சுட்டிக்காட்டி அன்பு பாராட்டக் கூறுகிறது. மற்றவர்கள் வேலையில் தலையிடாமல் கவனித்தால் பிரச்னை வராது என விளக்கம் அளித்துள்ள நுால்.– முகில்குமரன்
அருமை