/ கதைகள் / ஒரு வார்த்தையின் பொருள்
ஒரு வார்த்தையின் பொருள்
வங்கத்தின் மிகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ப்ரபுல்லராய். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவர், வெற்றிக்கு அடையாளமாக இவரது, நாற்பது படைப்புகள் திரைப்படங்களாக வெளி வந்திருக்கின்றன. இவரது சிறுகதைகளை தேர்வு செய்து, மொழிபெயர்த்திருக்கும் புவனா சாகித்ய அகாதமி விருது பெற்றவர். ப்ரபுல்லாராயின் படைப்பில் உள்ள,"மனிதன் மிகவும் பாமரன். ஏழைப் பெண் பிரசவத்திற்கு, அவன் செய்த உதவியும், மருத்துவமனை டாக்டர் தெரிவிக்கும் கருத்தும், கதையின் உயிரோட்டத்திற்கு சான்று. அவனும், தன் பயணத்தை தொடர "ராம் ராம் என்பது இந்த நாட்டில் வாழும் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களைக் காட்டுவதாகும். சிறந்த படைப்பு, நல்ல தமிழ்நடை உள்ள நாவல்.