/ கதைகள் / ஓவியன்
ஓவியன்
மாற்றுத்திறனாளிகள் உலக சாதனை படைக்க முடியும் என பதிய வைக்கும் நாவல். நல்ல உள்ளங்களை புண்படுத்தினால் திரும்ப தாக்கும் என்ற படிப்பினையை தருகிறது. ஊனமுற்றோர் என்ற அவச்சொற்கள் மாறி மாற்றுத்திறனாளி, திருநங்கை என்ற மதிப்புறு சொற்கள், அரசு செய்த உதவிகள் பட்டியல் பற்றிய தகவல்களை உடையது. சிறந்த ஓவியரான கணேஷ் கூன் விழுந்தவர் என்பதால், அத்தை மகள் அவரை மணக்க மறுக்கிறாள். உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் தங்கம் என்பதை படம் பிடிக்கிறது. பணக்கார பெண் அருணா, ஓவியர் கணேஷை காதலித்து, காத்திருந்து போராடி கரம் பிடிக்கிறாள். ஓவியக் கலையையும், காதலையும் பெரும் போராட்டத்தின் முடிவில் வெற்றி பெற வைக்கிறது இந்த காதல் ஓவியம். – முனைவர் மா.கி.ரமணன்