/ கட்டுரைகள் / படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
படித்த புத்தகங்களில் இருந்து பிடித்த கருத்துக்களை தொகுத்து வழங்கும் நுால். வாழ்வுக்கு பயன்படுவது தேர்வு செய்து தரப்பட்டுள்ளன.மொத்தம், 120 தலைப்புகளில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும், சிறிய கதை போல் சுவாரசியம் தருகிறது. தலைகுனிவு என்ற தலைப்பில் முதலில் ஒரு சிறிய செய்தி மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கடல் அருகே அபயம் தேடிவந்த பறவை பற்றியதாக அது மலர்ந்துள்ளது. இயற்கையை மையமாக்கி புனைந்து, மனிதர்களுக்கு அறம் சொல்லும் விதமாக தரப்பட்டுள்ளது. இது போல் ஒவ்வொரு படைப்புகளும் எளிய நடையில் புரிந்து கொள்ள ஏற்ற விதமாக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. சிறுவர் – சிறுமியருக்கு அறம் போதிக்க உதவும் வகையிலான நுால்.– ஒளி