/ கதைகள் / பஃறுளி
பஃறுளி
அரசியல் சம்பவங்களின் பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல். மதுரை சுற்றுவட்டார கிராமங்கள் கதை களமாக உள்ளன. வாழ்வின் பல கோணங்களையும், பரிமாணங்களையும் கூறும் நுால்.வசதியான குடும்பத்தில் பிறந்த பள்ளி ஆசிரியத் தம்பதி மணவாழ்க்கை தான் மையக்கருத்தாக உள்ளது. அதோடு மதுரை வரலாற்றில் அழிக்க முடியாத லீலாவதி படுகொலை, வில்லாபுரம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் பகுதி வரலாற்று பின்னணியுடன் பயணிக்கிறது.கதை மாந்தர்கள் எல்லோருக்குள்ளும் லீலாவதி படுகொலை ஒரு உணர்வாக, நினைவாக தொடர்ந்து தாக்கம் செலுத்துவதாக குறிப்பிடுகிறது. அதனால், அந்த வட்டாரத்தில் ஏற்படும் தொந்தரவு இன்னும் வந்து கொண்டே இருப்பதாக கூறி கவனத்தை ஈர்க்கிறது. உறவு சார்ந்த காதல், உறுத்தாத வசீகரம் என பதிவாகியுள்ள நாவல்.– ஊஞ்சல் பிரபு