/ வரலாறு / பல்லவர்கள் தொன்மையியல் வரலாறு
பல்லவர்கள் தொன்மையியல் வரலாறு
தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட பல்லவர்கள் பற்றி, பிரான்ஸ் நாட்டு தொல்லியல் அறிஞர் ஆராய்ந்து கண்டுபிடித்த தகவல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பல்லவ வம்சத்தின் ஆரம்ப காலம் பற்றிய தேடல்களுடன் உள்ளது.பல்லவ மன்னர்களான ராஜசிம்மன், மகேந்திரன், நந்திவர்மன் ஆட்சி சகாப்தங்களை தெளிவாக விவரிக்கிறது. பல்லவர் கால தொன்ம சிற்பங்களை சீராக அறிமுகம் செய்கிறது. பல்லவர் வரலாற்றிலும், அவர்கள் உருவாக்கிய கலைகளிலும் தெளிவான பார்வையை ஏற்படுத்தும் வகையில் ஆய்வுப்பூர்வ தகவல்களை தருகிறது.தொல்லியல், சிற்ப ஆதாரங்கள், வரைபடங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் பல்லவர் ஆட்சியின் தகவல் பெட்டகமாக மலர்ந்துள்ள நுால்.– மதி