/ வர்த்தகம் / பணப் பழக்கம்

₹ 200

பணத்தை வசப்படுத்தும் வழிமுறைகளை திட்டமிட்டு பழக கற்றுத்தரும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். சம்பாதித்த பணத்தை முறையாக முதலீடு செய்யும் வழிவகைகளை கூறுகிறது.பணம் சேர்க்கும் கலை என்பது உணர்ச்சி வழியே நடப்பதாக பதிவு செய்து கருத்துகளை பகிர்கிறது. பணத்துடன் பழகுவதால் வசப்படும் என எளிமையாக உரைக்கிறது. கட்டுரைகளின் தலைப்புகளும், பணம் செய்ய விரும்பு, பாயட்டும் பண அருவி, பணம் வரும் பாதை, பண முதிர் சோலை என கவரும் தலைப்புகளில் உள்ளது.சம்பாதிக்கும் பணத்தை சேமித்து பெருக்கும் வழிமுறைகளை இயல்பான நடையில் கூறுகிறது. சுவாரசியம் தரும் வகையில் கேள்வி வாக்கியங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. பணத்தை இயல்பாக புரிந்து பயன்படுத்த உகந்த ஆலோசனைகளை தரும் எளிமையான நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை