/ வரலாறு / பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

₹ 300

பாண்டிய நாட்டு அரசமைப்பு பற்றி விவரிக்கும் நுால். நாயக்கர் காலத்தில் முதலமைச்சர், சேனாதிபதி பதவிகளை இணைத்து, பிரதானி என்ற பதவி உருவாக்கப்பட்டிருந்ததை குறிப்பிடுகிறது. ஆளுநர் விசுவநாத நாயக்கர் காலத்தில் பிரதானியாக பணியாற்றிய அரியநாதமுதலியார், மதுரையை 72 பாளையங்களாக பிரித்து நிர்வாக நடைமுறை வகுத்திருந்ததை விவரிக்கிறது. சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவர் காலத்தில் நியமிக்கப்பட்ட பிரதானி தாண்டவராயப் பிள்ளை, பட்டத்து ராணியாக வேலுநாச்சியாரை அமர்த்த மருது சகோதரர்கள் துணையுடன் பாடுபட்டதை கூறுகிறது. அரசு பதவிகளில் கடைப்பிடிக்கப்பட்ட அதிகார வரம்புகள் பற்றியும் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆவணமாக திகழும் நுால். – சிவா


புதிய வீடியோ