/ வாழ்க்கை வரலாறு / பண்டிதமணி
பண்டிதமணி
பண்டிதமணி கதிரேச செட்டியார் வாழ்க்கை வரலாற்று நுால். அறிஞரின் வாழ்க்கை முழுமையாக தரப்பட்டுள்ளது. தெளிவு ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகள் தொகுக்கப்படடு இருக்கிறது. பண்டிதமணியின் பிறப்பு, வளர்ப்பு துவங்கி, கல்வியறிவு, புலவர்களுடன் தொடர்பு, சன்மார்க்க சபை, சொற்பொழிவுகள் பற்றிய விபரங்கள் உள்ளன. அரசர், புலவர்களுடன் சந்திப்பு அடுக்கு முறையில் விவரிக்கப்பட்டுள்ளது. போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கதிரேசன் ஆற்றிய தமிழ்ப்பணிகள் வியக்க வைக்கின்றன. வாழ்க்கை நிகழ்வுகளின் பட்டியல் ஆண்டு வாரியாக தரப்பட்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு, கவிமணி, நாவலர் சோமசுந்தர பாரதி போன்ற அறிஞர்களுடனான நெருக்கத்தையும் தருகிறது. மாணவர்களுக்கு பயன் தரும் வகையிலான வாழ்க்கை வரலாற்று நுால். – ஊஞ்சல் பிரபு




