/ ஜோதிடம் / பஞ்ச பட்சி சாஸ்திரம்
பஞ்ச பட்சி சாஸ்திரம்
ஆ ந்தை, காகம், கோழி, மயில், வல்லுாறு ஆகிய பறவைகள் சொல்லும் சாஸ்திரம், நல்ல நேரத்தை கணித்து கூறும் நுால். ஒவ்வொருவரும் பிறந்த நட்சத்திரப்படி ஒவ்வொரு நாளிலும் உகந்த நேரத்தை அறிவிக்கும் கணிதமாக உள்ளது. வாரத்தில் ஏழு நாட்களிலும் பகல் நேர ஐந்து பகுதிகள், இரவு நேர ஐந்து பகுதிகளை அட்டவணையாக தயாரித்து பயன் பெற வழிகாட்டுகிறது. ஜோதிடம், கைரேகை போல இது, ஆரூட கணித ஆராய்ச்சி என்கிறது. நல்ல காரியம் துவங்க, வீடு கட்ட, கிரகப் பிரவேசம் செய்ய உகந்த நேரத்தை வகுத்துக் காட்டுகிறது. அகத்தியர், உரோமரிஷி, கும்பமுனி, காகபுசுண்டர், போகர் போன்ற ரிஷிகள் சுவடிகளில் எழுதி வைத்து இருப்பதை தெளிவாக தருகிறது. பறவைகள் வாயிலாக ஆரூட சாஸ்திரம் பற்றி விரிவாக கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்




