/ வாழ்க்கை வரலாறு / இதழியல் பார்வையில் பசும்பொன் தேவர்
இதழியல் பார்வையில் பசும்பொன் தேவர்
சுதந்திர போராட்ட தியாகி மறைந்த பசும்பொன் தேவரின் சமூக செயல்பாடுகளை அறியத் தரும் நுால். இதழ்கள் வெளியிட்ட செய்திகள் சினிமா ரசனை குறித்த கடிதம் என ஆவணங்கள் இடம் பெற்று உள்ளன.தேவர் குறித்து இதழ்களில் வெளியான செய்திகள் தொகுக்கப்பட்டு உள்ளது. தேவர் பங்கேற்ற நிகழ்வு செய்திகள் மற்றும் பதிவுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு உள்ளன. காங்கிரஸ் சீர்திருத்த மாநாட்டை துவக்கி ஆற்றிய உரை தனித்துவம் மாறாமல் தரப்பட்டுள்ளது.நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், அரசு வழக்கறிஞராக பணியாற்றிய போது, விசாரணையில் தேவரை சந்தித்த நினைவலை சிறப்பாக பதிவாகி உள்ளது. தேவர் பெருமைகளை எடுத்துக்கூறும் நுால்.– ராம்