பத்தொன்பதாம் நூற்றாண்டு இதழ்களில் பெண்
கலைக்கோட்டம், 12, புதிய தெரு, வினாயகபுரம், அம்பத்தூர், சென்னை-53. (பக்கம்: 160) ஜநாநந்தினி, உதயதாரகை, மஹாராணி, சுகுணபோதினி, மனோரஞ்சித விநோதம், வித்தியா வர்த்தமானி இதெல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் வெளியான பத்திரிகைகளின் பெயர்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இப்படி 20க்கும் மேற்பட்ட அரிய இதழ்கள் பற்றியும், அவற்றின் மூலம், 18ம் நூற்றாண்டில் சமூகத்தில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது, பெண் கல்வி, திருமணம், விதவைகள் நிலை, சமூக முன்னேற்றம் ஆகிய நிலவரங்களையும், இன்றைய தலைமுறையினருக்கு அழுத்தமாக எடுத்துரைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள அருமையான நூல். பின்னிணைப்பில் பெண் கல்வி பற்றிய அக்காலப் பாடல்கள், பெண் கல்வி விவாதம், சில பத்திரிகைகளின் ஒளிப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதழியல், சமூகவியலில் ஆய்வு செய்வோர், பெண்ணுரிமை பேசுவோர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.