/ கதைகள் / பாயசம்

₹ 375

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாயசம் என்ற கதையின் திரை வடிவப் படம் முகப்புப் படமாக அமைந்துள்ளது. சுகுமாரனின் பதிப்புரை, தி.ஜானகிராமனின் சிறுகதைகள் பற்றிய வடிவத்தை வழங்குவதுடன், கதைகள் உணர்த்தும் உணர்ச்சி நிலைகளையும் காட்டுகிறது. தொகுப்பில் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. எம்டன் என்னும் சிறுகதையில், தடிமனான ஒருவன் கபடி விளையாட்டில் சிறப்பிடம் பெற்று, எம்டனாக இருந்ததை விளக்குகிறது. நாராயணன் கபடி விளையாட்டில், எம்டனின் கையைக் கடித்து ரத்தம் வரவைத்தவன் என்றாலும், காப்பாற்றப்பட வேண்டியவன் என்ற வேகத்தில் எம்டனை காப்பாற்ற முயன்று ஆற்றில் போய்விட்டான் என்பதை உணர்த்தும்போது கண்களில் ஈரம் கசிகிறது. ஜானகிராமனின் சிறுகதைப் போக்கிற்கு ஓர் உரைகல்லாக அமைந்த தொகுப்பு நுால்.– முகிலை ராசபாண்டியன்