/ தமிழ்மொழி / பேராசிரியரின் தொல்காப்பிய உரை ஓர் ஆய்வு
பேராசிரியரின் தொல்காப்பிய உரை ஓர் ஆய்வு
தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான பேராசிரியரின் உரைத் திறனை ஆய்வு செய்யும் நுால். நுட்பங்களை ஆறு தலைப்புகளில் ஆராய்ந்துள்ளது. பேராசிரியர், அவரது உரை, உரை நலம், பிறர் தந்த உரைகள், இலக்கியக்கொள்கை என்ற பிரிவுகளை கொண்டுள்ளது. பேராசிரியர் என்ற பெயரில் பலர் இருந்துள்ளதை ஆராய்ந்து தெளிவுபடுத்துகிறது. புலமை, உரை, உரைநலம் ஆகியவற்றில் தமிழ் இலக்கியப் பரப்பை நோக்கியுள்ளது புலப்படுகிறது.பிறர் கருத்துகளுக்கு உரிய மறுப்பும் தெளிவாக தரப்பட்டிருக்கிறது. இறுதியில், இலக்கண மேற்கோள், சொல் வேறுபாடு பற்றிய ஆராய்ச்சியை அட்டவணைப்படுத்தியிருப்பது கடும் உழைப்பை காட்டுகிறது. தமிழ் ஆர்வலர்களுக்கு பயன் தரும் நுால்.– ராம.குருநாதன்