/ கதைகள் / பிஸ்டல் 1942

₹ 110

இரண்டாம் உலகப்போர் கால சம்பவத்தை மையமாக கொண்டு கற்பனையாக புனையப்பட்ட குறுநாவல். அன்றைய சென்னையின் ஒரு பகுதியை ஆண்ட ஆல்பர்ட் தாமஸ் பற்றி கூறுகிறது. இவரது மாளிகையில் உணவு பரிமாற நியமிக்கப்பட்டிருந்த தமிழர்கள், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை ஆதரித்து, அதில் பங்கேற்க முடிவு செய்கின்றனர். இதை அறிந்த இவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது. அதை நிறைவேற்ற துப்பாக்கி தயாரித்தது எப்படி, சோதனை செய்ய எடுத்த முயற்சி, அந்த துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டனரா என, நாவல் விறுவிறுப்பாக நகர்கிறது. துப்பாக்கி தயாரிக்கும்போது இருந்த மனநிலை, கடைசியில் பலியானது யார் என புதிருக்கும் விடை காண்கிறது. கெட்டதை அழிக்க காலத்தால் மட்டுமே முடியும் என கூறும் நாவல். – டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ