/ ஆன்மிகம் / பூலோக தெய்வங்கள்
பூலோக தெய்வங்கள்
மனிதர்களாக பிறந்து மகான்களாக வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர்களின் அனுக்கிரகத்தை விவரிக்கும் நுால். ரமணராக வாழ்ந்த வெங்கட்ராமன், பாம்பன் சுவாமிகளாக வாழ்ந்த அப்பாவு, தட்சிணா மூர்த்தியாக வாழ்ந்த அருணாச்சலம் பற்றிய விபரங்கள் உள்ளன. விட்டோபாவாக வாழ்ந்த லோதா, சேஷாத்திரி, பட்டினத்தாரின் இறைபக்தி பற்றி அழகாக விளக்கப்பட்டுள்ளது. மகான் என்பது அனைத்தையும் துறப்பது, ஏளனங்களை அனுபவித்து வழிப்போக்கராக வாழ்ந்து மக்கள் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறது. இறையருள் பெற்ற மகான்கள் காலத்தில் வாழ்வதும், பொன்மொழிகளை படிப்பதும் இறையருள் பெற உதவும். மிக எளிய வார்த்தைகளால் பிறவிப்பயனை கடக்க உதவும் அற்புத நுால். – எம்.எம்.ஜெ.,