/ கதைகள் / போர் கொண்ட காதல்
போர் கொண்ட காதல்
உலகை உலுக்கிய முதல் உலகப்போர் கொடூர நிகழ்வு சார்ந்து படைக்கப்பட்டுள்ள ஆங்கில நாவலின் தமிழாக்க நுால். போர் நடந்த நிலப்பரப்பை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது. நாயகனே கதையை சொல்வதாக அமைந்துள்ளது.உலகப் போரின் கொடூரத்தையும், அதனால் ஏற்பட்ட பேரழிவையும் கதைப் போக்கில் வெளிப்படுத்துகிறது. அதே சமயம் மென்மையான காதல் உணர்வையும் இனிமையாக இதயத்தில் பதிக்கிறது. போர் காட்சிகள் நேரில் பார்ப்பது போல் வர்ணிக்கப்பட்டுள்ளன.புனிதம், பெருமை, தியாகம் போன்ற சொற்களை பலத்த கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதே நேரம் காதலின் மென்நடையை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. கொடூர நிகழ்வையும், மென்மையான உளப் பிணைப்பையும் உணர்வுடன் தரும் உலகப் புகழ் பெற்ற நாவல்.– மதி