/ கதைகள் / பொறையுடைமை
பொறையுடைமை
பொறுமைக்கு இலக்கணம் சொல்லும் நீதிக் கதைகளின் தொகுப்பு நுால். பெரிய எழுத்துக்களில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான படங்கள் உள்ளன. ஒரு துறவி, உடன் இருந்தோர் கொடுத்த துன்பத்தை பொறுத்துக் கொண்டார். ஆபத்து காலத்தில் துன்பம் கொடுத்தவர்களை காப்பாற்றினார். கதையின் முடிவு வாசகமாக, ‘அவிழ்ப்பது எளிது திரட்டுவது கடினம்’ என அறிவுரைக்கிறது. பஞ்சு பொதியும், வெளியில் கொட்டிய அவதுாறு செய்திகளையும் திரட்ட முடியாது என்ற ஒப்புமை கதை பிஞ்சு நெஞ்சுகளில் பதியும். எச்சில் துப்பியவனை நோக்கி, ‘புனித நீராட வைத்தாயே’ என புகழும் மகத்துவமான மனம் எல்லாருக்கும் வந்து விடுமா என்ன... கோரக்கநாதர் கதை பொறுமையை கற்றுக்கொள்ள சொல்லித் தருகிறது. நீதியை நிலை நாட்டும் நுால். – சீத்தலைச்சாத்தன்




