/ வாழ்க்கை வரலாறு / புகழப்பட்டவர்
புகழப்பட்டவர்
நபிகள் நாயகத்தின் பெருமை மிகு வாழ்க்கை வரலாற்று காவியம், எளிய மொழி நடையில் எழுதப்பட்டுள்ளது. சிறிய தலைப்புகளில் குழப்பமின்றி புரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் உரிய ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளன. இஸ்லாமிய இலக்கிய கழக உதவியுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.அண்ணலின் பிறப்பு முதல் நபி பட்டம் அருளப்படும் வரையுள்ள நிகழ்வுகளை சிறு சிறு தலைப்புகளில் தொகுத்து அடுக்காக அமைத்து எழுதப்பட்டுள்ளது. அரபகம் – ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் துவங்கி, தகவல்களை காட்சிப்படுத்துகிறது. உலகின் மூன்று கண்டங்களுடன் அரபகம் இணைந்திருக்கும் சிறப்பை உணர்த்துகிறது. தொடர்ந்து நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு தொய்வின்றி சொல்லப்பட்டுள்ளது. இறுதியில், பயன்படுத்திய ஆதார நுால்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தை புரிந்து கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ள நுால்.– ஒளி