/ கவிதைகள் / புனிதரைப் போற்று
புனிதரைப் போற்று
தேவசகாயம் பிள்ளை புனிதர் பட்டம் பெற்றதைப் போற்றி எழுதப்பட்ட நுால். இந்தியாவில் பிறந்த அவர் இல்லற வாழ்வில் இருந்தபடியே இறைவன் பெருமையை நிலைநாட்டியவர். சிறப்பு பொருந்திய புனிதர் பட்டம் பெற்றவர். அவரது பெருமையைப் பேசுவதாக அமைந்துள்ளது.இறைமாட்சி இயம்பிய காதை துவங்கி, புனிதராய் உயர்ந்த காதை வரை, 13 தலைப்புகளில், கவிதையில் தேவசகாயத்தின் புகழ் பேசப்படுகிறது. கவிதையை எளிதில் விளங்கிக் கொள்ள, பொருள் உரைநடையில் தரப்பட்டுள்ளது.ஒருவர் வரலாற்றை கவிதையில் எவ்வாறு எழுத வேண்டும் என வழிகாட்டுகிறது. கவிதை எழுத முயல்வோர்களுக்கு உதவும் நுால்.– பேராசிரியர் இரா.நாராயணன்