/ வாழ்க்கை வரலாறு / புரட்சித்தலைவி ஜெயலலிதா

₹ 250

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நுால். மைசூரிலும், சென்னையிலும் படித்ததை தெளிவாக கூறுகிறது. மெட்ரிக்குலேஷன் தேர்வில் தமிழகத்தில் முதல் மாணவியாக தேறியது குறித்து தெரிவிக்கிறது. பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் 13ம் வயதிலே என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்தது குறித்த தகவல்கள் உள்ளன. ஆங்கில மொழித்திறனால் மேடை நாடகங்களில் நடித்ததை குறிப்பிடுகிறது. வெண்ணிற ஆடை திரைப் படத்தில் நடித்து, தமிழ் படவுலகில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்ததை குறிப்பிடுகிறது. தமிழக அரசில் ஐந்து முறை முதல்வர் பதவி வகித்தது பற்றியும் தகவல்கள் உள்ளன. ஜெயலலிதா வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவும் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை