/ அரசியல் / புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான சிந்தனை, கருத்துக்களை வெளிப்படுத்தும் நுால். அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தல், ஆளும் தன்மை மாறுதல், ஓட்டு போடும் முறை, வேட்பாளர் தேர்வு முறை, விரும்பிய கல்வி கற்க வழி, தேர்தல் துறை போன்ற தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.நிகழும் கொடுமைகளிலிருந்து மீண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான தகவல்களை உடையது. ஓட்டு போடும் வயதை 25 ஆக உயர்த்த வேண்டும் என்கிறது. ஜாதிகளாக வாழ்வதை விட மக்களாக வாழ வலியுறுத்துகிறது. ஆட்சி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைக்க கூறுகிறது. வரி போடும் முறையை மாற்றி அமைக்க வலியுறுத்துகிறது.கட்டுப்பாடுகளும், ஆலோசனைகளும் புதிய ஜனநாயகம் படைக்க உதவும் என வலியுறுத்தும் நுால்.– வி.விஷ்வா