/ கட்டுரைகள் / புதுச்சேரி கோட்டைகள்
புதுச்சேரி கோட்டைகள்
பிரஞ்சுக்காரர்கள் கட்டிய கோட்டைகள் பற்றி தகவல்களை தரும் நுால். ஐரோப்பியர் உருவாக்கிய ஆவணங்களையும் உள்ளடக்கியுள்ளது.ஐரோப்பியரின் இந்திய வருகை, அதற்கான காரணங்களை பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து ஆய்வு நோக்கில் திரட்டி தருகிறது. இந்தியாவின் தென் பகுதியில் அவர்களின் செயல்பாடு, கோட்டை அமைப்பு, திட்டங்கள், வரைபடங்களை எல்லாம் தொல்லியல் ஆதாரங்களுடன் தருகிறது.இந்திய மண்ணில் ஐரோப்பியரின் செயல்பாடு பற்றிய தகவல்களை ஆய்வு வழியாக ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ள வரலாற்று நுால். – ஒளி