வாசகர்கள் கருத்துகள் (1)
K vkumar
ஜூலை 19, 2026 11:32 AM
எப்படி ஆர்டர் செய்வது
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! Send Post
கோபத்தில் கொந்தளித்தாலும் கூட வார்த்தைகளில் கண்ணியம், கட்டுப்பாட்டை காக்கும் வகையில் அறிவுரைகள் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதலர் செயல் குறித்து, எள்முனை கூட விரசம் இன்றி சித்தரிக்கிறது. சமுதாய மேம்பாடே உயர்ந்தது என்ற மேலோங்கிய சிந்தனை ஒவ்வொரு பக்கத்திலும் அமைந்துள்ளன. பெண்ணின் பேரழகை வர்ணிக்கும் போது விரசமின்றி முத்திரையை பதிக்கிறது. உளி கொண்டு செதுக்கியதை போல் கதை கருத்துகள் உள்ளத்தில் பதிகின்றன. உண்மை அன்பின் சிறப்பை உணர்த்துகின்றன. எத்தனையோ ராஜ தந்திரிகளில், சாணக்கியர் மட்டும் தனித்து நிற்பது ஏன் என புரிய வைக்கிறது. பல்வேறு இதழ்களில் வெளிவந்த கதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்
எப்படி ஆர்டர் செய்வது