/ கட்டுரைகள் / ரகுநாயகம் 100
ரகுநாயகம் 100
காந்திய நெறித் தோன்றலாக, தமிழறிஞராக, சமுதாய சேவைச் செம்மலாக வாழ்ந்தவரின் நுாற்றாண்டு விழா மலாராக உருவாக்கியுள்ள நுால். ரகுநாயகத்துடன் நன்கு பழகியோர், நேரடியாகத் தொடர்பு கொண்டோர், அறிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மலரும் நினைவுகளை கட்டுரையாக பெற்று இந்த மலர் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சான்றோர், அறிஞர் பெருமக்கள் எழுதிய கட்டுரைகளால் அழகு சேர்க்கப்பட்டுள்ளது. பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், மறைமலை இலக்குவனார், சரசுவதி ராமநாதன் போன்றவர்கள் ரகுநாயகம் நினைவை, அவரது ஈடுபாடான சமூகச் செயல்பாட்டை, புகழை, காந்தியவாதியாக விளங்கிய பண்பைப் போற்றி வடித்து சொல் மாலையாக மலர்ந்துள்ள நுால்.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்