/ வாழ்க்கை வரலாறு / ராஜாஜி காமராஜர்
ராஜாஜி காமராஜர்
அரசியலில் சிறந்து விளங்கிய ராஜாஜி, காமராஜர் வாழ்வை எடுத்துரைக்கும் நுால்.ஆட்சியில் நேர்மை, எளிமை, துாய்மையை கடைப்பிடித்த காமராஜர், தென்னாட்டு காந்தி என்றும் அழைக்கப்பெற்றார். அவரது சிறப்பான பண்புகளை பட்டியலிட்டு செயல்பாடுகளை எடுத்துக்கூறுகிறது. வாழ்வின் கடைசி தருணத்தையும் விவரிக்கிறது. தமிழக முதல்வராக இருந்தபோது கல்வியில் மாற்றங்களை கொண்டு வந்தார், ராஜாஜி. வடமொழி நுால்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை தமிழில் மொழிபெயர்த்து எழுதி உள்ளது, இலக்கியத்திற்கு பெரும் பங்கு ஆற்றியதை எல்லாம் குறிப்பிடுகிறது. இருவரின் சாதனைகளையும் பட்டியலிட்டு கூறுகிறது. சிறப்பாக ஆட்சி செய்த இரு தலைவர்களின் வரலாற்றை அறிய துணை செய்யும் நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்