₹ 60

மூதறிஞர் ராஜாஜி வாழ்க்கை வரலாற்று நுால். அவர் படைத்துள்ள நுால்களின் விபரமும் தரப்பட்டுள்ளது. ஹிந்தித் திணிப்பும் மதுவிலக்கும் மற்றும் ராஜாஜியும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களும் என்ற தலைப்பிலான கட்டுரைகளில் முக்கிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. குலக்கல்வித் திட்டம் ஏற்படுத்திய கொந்தளிப்பு மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ராஜாஜி ஏன் ஜனாதிபதியாக ஆக முடியவில்லை என்ற விவாத தகவலும் உள்ளது. ராஜாஜி வகித்த பதவி விபரங்கள் தரப்பட்டுள்ளன. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய தகவல்கள் நிறையவே உள்ளன. ராஜாஜியின் குடும்ப விபரமும் சேர்க்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு எதிராக தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு 1967ல் பெரும் பங்காற்றிய தகவலையும் தரும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை