/ வாழ்க்கை வரலாறு / ராஜம்மாள்

₹ 50

வேளாண் அமைச்சக பொருளாதார வல்லுனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ராஜம்மாள் வாழ்க்கை வரலாற்று நுால். தம்பி, தங்கையை கவனித்து, தானும் படிக்க எடுத்த முயற்சியை, ‘படிப்பே தலையாய கடமை’ கதை, கல்வி அவசியத்தை போதிக்கிறது. படித்து கொண்டிருந்த போதே ராஜம்மாளுக்கு திருமணம் முடிந்ததை, ‘மாமா வந்தார்’ என்ற கதை சிந்திக்க வைக்கிறது. பள்ளியில் வீட்டு சமையல் போல் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என, சமையல் கலை படிக்க விரும்பி, கணவர் தடுத்ததை, ‘மீண்டும் படிப்பு’ என்ற கதை பேச வைக்கிறது. போராட்டங்களுக்கு பின், அமெரிக்காவில் சத்துணவு பட்ட மேற்படிப்பு படிப்பதை, ‘கனவுகள் நனவான காலம்’ கதை வழியாக நம்பிக்கை ஊட்டுகிறது. பத்மஸ்ரீ விருது வரை புகழ் பெற்ற வாழ்க்கையை விவரிக்கும் நுால். – டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ