/ கட்டுரைகள் / ரமணரின் நான் யார்?

ரமணரின் நான் யார்? என்ற நூல் அவர் தம் அனுபவத்தின் வெளிப்பாடு நம் நாட்டு தத்துவ மரபின் சாரம். ஞான விசாரம் என்ற பெயரும் நூலுக்கு உண்டு. இந்நூலை 21 பிரிவுகளாக பிரித்துக்கொண்டு கட்டுரை விளக்கமாக தந்திருக்கிறார் ஆசிரியர். ரமண வழியில் ஆழங்கால்பட்ட நூலாசிரியரின் புரிதல் நூலின் பக்கங்களில் வெளிப்படுகிறது. நேரான பாதை இதுவே என்கிறார் ரமணர்.அவரது 21வது வயதில் அருளி செய்யப்பட்டது இந்நூல். சிவப்பிரகாசம்பிள்ளை என்ற பக்தர் வேண்டுகோளுக்கு இணங்க ரமணர் அவ்வப்போது எழுதித்தந்த உபதேச தொகுப்பாகும். ரமண மார்க்கம் மகா யோகம் எனப்படும். முக்திக்கு வழி சொல்கிறது இவ்வுரைநடை நூல்.நூலை நுணுகி ஆய்ந்த ஆசிரியர் நூலின் இறுதியில் ரமண வழியை பின்பற்ற முக்கியமான குறிப்புகளையும் தந்திருக்கிறார். மற்ற மார்க்கங்களிலிருந்து ரமண வழி எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அங்கு தெரிவிக்கிறார். தெளிவு மிக்க இந்நூல் படித்து பயன்பெறத்தக்கது. ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.


சமீபத்திய செய்தி