/ கதைகள் / இராமாயணக் கதைகள்

₹ 60

ராமாயணம் என்ற பலாப்பழத்தில் இருக்கும் சுளைகளை தனித்தனியே தருவது போல் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். ராமாயணக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி குணங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. பிள்ளை பாசமுள்ள தசரதன், பதற்றம் மிக்க கைகேயி, மன உறுதி மிக்க ராமன், பண்புள்ள பரதன், பாசமிகு லட்சுமணன் என வகுத்து தருகிறது. விடாமுயற்சியுள்ள பகீரதன், அன்புடைய குகன், வீரமிகு ஜடாயு, வஞ்சகி சூர்ப்பனகை என வாசிப்போரை வசப்படுத்துகிறது. வானத்துக்கும் பூமிக்கும் நடுவில் தொங்கும் திரிசங்கு கதை சுவாரசியம் தருகிறது. விஷ்ணுவில் பாதி ராமன், கால் பங்கு லட்சுமணன், அரைக்கால் பங்கு பரதன் என அவதார மகிமையை விளக்குகிறது. சிறுவர் படித்து மகிழ ஏற்ற ராமாயணம். – முனைவர் மா.கி.ரமணன்


முக்கிய வீடியோ