/ பொது / சாலைப் பாதுகாப்பு
சாலைப் பாதுகாப்பு
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் புத்தகம். எதிலும் அவசரம், விதி மீறல், பராமரிக்கப்படாத வாகனங்கள் இவை தான் விபத்துக்கு காரணம் என்பதை புள்ளி விபரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது. வாகன ஓட்டி வாழ்வில் சோகம் நிகழக்கூடாது என்கிறது. வாகனத்தை பகலில் ஓட்டும் வேகம் இரவில் குறைவாக இருக்க வேண்டும் என விளக்கம் தருகிறது. எச்சரிக்கை குறியீடுகளின் படங்கள், அவற்றின் விளக்கம் ஒவ்வொரு வாகன ஓட்டியிடமும் இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறது. சிறு கவனக்குறைவும் பெரிய விபத்தை தந்து விடும் என சுட்டிக்காட்டுகிறது. படிக்கட்டு பயண ஆபத்தை கூறுகிறது. துாங்காமல் வாகனம் ஓட்டினால் சோகம் தான் போன்ற போதனைகள் உள்ளன. விபத்தை தவிர்க்க வழிகாட்டும் நுால். – சீத்தலைச்சாத்தன்




