/ கவிதைகள் / ரூமியின் ருசிகரக் காதல் மொழிகள்
ரூமியின் ருசிகரக் காதல் மொழிகள்
பாரசீக கவிஞரின் காதல் கவிதைகள் எளிய நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நுால். காதல் பரிணாமத்தை, ‘காதல் மீது காதல் கொண்டேன்; காதலில் விழுந்தவர் காலமெல்லாம் வாழ்வார்; காதலில் விழுந்த போது உன்னையே காதலிப்பாய்; உனக்குள் குளிர்ந்த காதல் புரியும் ஒன்றாக வார்த்தை இல்லாமல் கூறு... அப்போது தான் பேச்சை தொடரும் இதயம்’ என தருகிறது. உன்னத காதல் கோட்பாடாக, ‘காகிதத்தில் எழுதவில்லை காதலை... ஏனெனில் காகிதம் கிழிந்து போகும்; கல்லில் எழுதவில்லை... ஏனெனில் கல் பொடியாகும்; இதயத்தில் எழுதும் காதலே எல்லா காலத்திலும் இருக்கும் உயிரோடு’ என உரைக்கும் கவிதை நுால். – புலவர் சு.மதியழகன்




