/ கதைகள் / ராய சிம்மாசனம்
ராய சிம்மாசனம்
விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையமாக உடைய நாவல் நுால். கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகர பேரரசில் நிலவிய ஆட்சி முறை, அரசியல் சதி, அதிகாரப் போட்டிகள், நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என வரலாற்று தகவல்கள் நிரம்பியுள்ளன. ஹம்பி நகரம், கல் தட்டு, கல்லாலான தேர், அஞ்சனாத்ரி மலை, துங்கபத்திரை ஆறு, கோட்டை, அரண்மனை என முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பற்றிய விபரங்கள் உள்ளன. நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் முழுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களாக விரிந்து, கதை விவரிப்பு வாசிப்புக்கு சுவாரஸ்யம் ஊட்டுகிறது. சரித்திர சான்றாக, 13ம் நுாற்றாண்டில் வரைபடம் இருக்கிறது. விஜய நகரத்தில் உலவி வந்த நிறைவை தரும் நாவல். – ஊஞ்சல் பிரபு




