/ ஆன்மிகம் / சகல தெய்வங்களின் காயத்திரி மந்திரங்கள்
சகல தெய்வங்களின் காயத்திரி மந்திரங்கள்
தெய்வங்களுக்கு உரிய காயத்திரி மந்திரங்களை தொகுத்து தரும் நுால். கணேச காயத்திரி துவங்கி, நவக்கிரக காயத்திரி வரை, 67 தலைப்புகளில் மந்திரங்கள், அவற்றை உச்சரிக்கும் விதம் பற்றி அறிய தருகிறது. ஒவ்வொரு தேவதைக்கும் மந்திரம் உண்டு என்கிறது. ஒரே தெய்வத்தின் பலவகை தோற்றங்களுக்கும் தனித்தனி மந்திரங்களை விளக்குகிறது. காயத்திரி மந்திர சக்தி நல்ல பலன்களை தரும் என பொருளுடன் தரப்பட்டுள்ளது. அதனால் கிடைக்கும் பலன்களையும் உரைக்கிறது. கணேச காயத்திரி மந்திரத்தை சொல்லி, முதலில் கணபதியை வணங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கூறுகிறது. ஆவணி அவிட்ட காயத்திரி ஜபம் பற்றியும் கூறுகிறது. பூஜை அறையில் அன்றாடம் படிக்க வேண்டிய நுால். – புலவர் ரா.நாராயணன்




