/ கதைகள் / சமகால இந்தியச் சிறுகதைகள் தொகுதி - 4

₹ 325

பக்கம்: 512 தமிழில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய வீடு சிறுகதை உட்பட சமகால இந்திய எழுத்தாளர்களின், 21 சிறுகதைகள் ஆங்கிலம் வாயிலாகத் தமிழாக்கம் பெற்றுள்ளன. கே.எஸ். துக்கல் பஞ்சாபி மொழிக் கதையாசிரியர் அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த "வாடகை காரோட்டி சிறுகதையும் இடம் பெற்றுள்ள இத்தொகுப்பில் இந்தியில் நிர்மல் வர்மாவின் பறவைகள், மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய சின்ன சின்ன நிலநடுக்கங்கள், ஒரியாவில் கோபிநாத் மொகந்தியின் அம்புப்படுக்கை போன்ற சிறுகதைகள் மனதில் தங்கும்படி உள்ளன. பல்வேறு வழிகளில் இச்சிறுகதைகள் படைக்கப்பட்டிருந்தாலும், கதையம்சம், சமூக அவலங்களின் வெளிப்பாடு, பெண்களின் இழிநிலை, குடும்பப் பிரச்னை போன்றவை ஒட்டுமொத்த இந்தியாவிலும், ஒரே மாதிரியாகத் தான் பரவிக் கிடக்கின்றன என்பது தெளிவாகிறது. மொழி பெயர்ப்பு கதைகள் என்பதால், ஒவ்வொரு மொழி எழுத்தாளருடைய இயல்பான நடை, கற்பனையோட்டம் இவற்றை தாண்டி தான் சிறுகதைகளை படிக்க வேண்டியுள்ளது. அதனால் சிற்சில தொய்வுகளும் ஏற்படுகின்றன. எனினும் பிறமொழிப் படைப்புகளின் மூலம், இந்திய இலக்கிய வளர்ச்சியை நாம் ஒப்பிட்டு பார்க்க, இத்தகைய மொழி பெயர்ப்புகள் உதவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை